ஜோகூரில் டிஏபி, பிகேஆர் தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு

1gagநேற்று ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவும் அவரின் பிகேஆர் சகாவான சுவா ஜுய் மெங்கும் வெளிப்படையாக சர்ச்சையிட்டுக்கொண்டதை அடுத்து இருவருக்கும் வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.

1gag1“பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமைத் தொடர்பு கொண்டேன். சுவாவும் பூ-வும் ஜோகூரில் மாநில டிஏபி, பிகேஆர் உறவுகள் பற்றி அதிலும் குறிப்பாக இட ஒதுக்கீடு பற்றிப் பொதுவில் சர்ச்சையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை இருவரும் ஒப்புகொண்டோம்”, என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் (இடம்) கூறினார்.

“வரும் தேர்தலில் இரு கட்சிகளிடையிலான இட ஒதுக்கீடுகள் பற்றி அறிக்கை வெளியிடுமுன்னர் மாநிலத் தலைவர்கள் இருவருமே தத்தம் கட்சி மேலிடத்துடன் ஆலோசனை கலக்க வேண்டும்”.

அவ்விருவருக்குமிடையிலான இணக்கமின்மையை பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அவற்றுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டன என்பதை லிம் சுட்டிக்காட்டினார்.

“இப்படிப்பட்ட எதிர்மறையான விளம்பரம் விரும்பத்தக்கதல்ல.பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில்  அது பிஎன்னுக்குக் கொண்டாட்டமாகவும் பிஎன் கோட்டை(ஜோகூர்)க்குள் ஊடுருவ நினைக்கும் பிகேஆர் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும்”.

தேசிய அளவில் இடப் பங்கீடு தொடர்பில் பக்காத்தான் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பேச்சுகள் தொடர்வதாகவும் லிம் கூறினார்.

அப்பேச்சுகளில் டிஏபி சார்பாக தேசிய துணைத் தலைவரும் டிஏபி தேர்தல் குழுத் தலைவருமான டான் கொக் வாய் கலந்து கொண்டிருக்கிறார்.

நேற்று கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த பூ, அன்வார் அல்லது பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் சுவாவிடமிருந்து மாநில தலைமையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

சுவாவின் ஆணவப் போக்கினால், ஜோகூர் டிஏபி-க்கும் பிகேஆருக்கிமிடையில் நிலவிய வலுவான ஒத்துழைப்பு சீர்குலைந்து விட்டதாக அவர் கூறினார்.

 

 

TAGS: