பிபிபி உறுப்பினர்கள் மலேசிய நண்பன் தலைமையகத்திற்குள் அத்துமீறல்

PPP_Malaysian Nanban_02பிபிபி கட்சியை அவமானப்படுத்தியுள்ளதாக தாங்கள் கூறிக் கொள்ளும் ஒரு கட்டுரை மீது மலேசிய நண்பன் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரி நேற்று அந்தத் தமிழ் நாளேட்டின் தலைமையகத்தை அதிருப்தி அடைந்துள்ள 60 பிபிபி உறுப்பினர்கள் ‘ஆக்கிரமித்து’ கொண்டனர்.

அந்த ஐந்து மணி நேர ‘முற்றுகை’ நேற்று பிற்பகல் மணி 2.30 வாக்கில் தொடங்கியது. அப்போது அந்த அவதூறு கட்டுரையை எழுதாத நிருபர் எல்கே ராஜ் பல பிபிபி உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

keviyaS1தாம் ஐந்து முறை குத்தப்பட்டதாகக் கூறிக் கொண்ட அவர், தலையிலும் வயிற்றிலும் வலது காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார். தம்மைத் தாக்கியவர்களில் ஒருவர் தமக்கு எதிராக கொலை மருட்டலையும் விடுத்ததாகவும் அவர் கூறிக் கொண்டார்.

“அந்த நபர் என்னை மருட்டினார், “நீங்கள் போலீஸில் புகார் செய்தால் நீங்கள் காணாமல் போய் விடுவீர்கள் என அவர் சொன்னார்,” என ராஜ் நிருபர்களிடம் சொன்னார்.

பத்திரிக்கைகள் வழி தமது அடையாளம் வெளியிடப்பட்டு விடும் என்பதால் தாம் இப்போது உயிருக்கு அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிபிபி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது

அந்த நாளேட்டின் அதிகாரிகளைச் சந்திக்க, கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ-வில் உள்ள மலேசிய நண்பன் அலுவலகத்துக்குச் சென்ற பிபிபி தலைவர் எம் கேவியஸுடன் பிபிபி உறுப்பினர்களும் போயிருந்தனர்.

PPP_Malaysian Nanban_03நாளேட்டின் ஊழியர்கள் மீது அந்தக் குழுவினர் கடுமையாகவும் தவறாகவும் நடந்து கொண்டதாக மலேசிய நண்பன் அதிகாரிகள் கூறினர்.

அவர்கள் கட்சி உறுப்பினர்கள் எனத் தெரிய வந்தால் தாக்குதல்காரர்கள் மீது தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் என கேவியஸ் நிருபர்களிடம் கூறினார்.

“அந்தச் சம்பவம் மீது நான் நிர்வாகத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,” என அவர் மலேசிய நண்பன் அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் தமது ஆதரவாளர்களிடம் கேவியஸ் சொன்னார்.

அந்த தினசரியின் அழைப்புக்கு இணங்க தமது ஆதரவாளர்கள் பெரிய குழுவாக அங்கு சென்றதாகவும் அவர் நிருபர்களிடம் சொன்னார்.

நண்பன் சட்ட நடவடிக்கை எடுக்கும்

ஆனால் அதனை மறுத்த மலேசிய நண்பன் இயக்குநர் அகமட் மைதின் சிக்கந்தர் பாட்சா, கட்டுரை மீது சந்திக்க விரும்புவதாகக் கேட்டுக் கொண்டது கேவியஸ் தான் என்றார்.

keviyas3பிபிபி கூட்டம் அடாவடித்தனமாக நடந்து கொண்டதாகவும் கேவியஸுடனான சந்திப்பு சுமூகமாக நிகழவில்லை என்றும் அவர் சொன்னார்.

நேற்று வெளியான அந்தக் கட்டுரை” ஐந்து கிலோ அரிசியும் இறைச்சி குழம்பும் இந்தியர் பிரச்னைகளைத் தீர்த்து விடுமா ?” என்ற கேள்வியை எழுப்பியிருந்ததாக அவர் விளக்கினார்.

மலாக்காம் ஜோகூர், கெடா ஆகியவற்றில் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கப்பட்ட பிபிபி நிகழ்வுகள் பற்றி அந்தக் கட்டுரை குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“உண்மையான செய்திகளை வெளியிடுவதே எங்கள் வேலையாகும். அவர்களுக்கு திருப்தி இல்லை என்றால் எங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள்.”

‘பிபிபி ஆளும் கட்சியில் ஒர் அங்கமாகும். கேவியஸ் ஒரு வழக்குரைஞர். அவர் சட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்,” என அவர் மேலும் சொன்னார்.

தங்கள் உடமைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தமது நிறுவனம் பிபிபி-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அகமட் மைதின் தெரிவித்தார்.

TAGS: