தமிழர் தாயகத்தில் இராணுவ ஆட்சியை நீக்கு : மட்டக்களப்பில் போராட்டம்

batticaloa_protest”வடக்கு – கிழக்கில் இராணுவ ஆட்சியை நீக்கு” என்ற தொனிப் பொருளில் இன்று மட்டக்களப்பு நகரில் பொது மக்களிடமிருந்து கையொப்பங்களை திரட்டும் போராட்டமொன்று நடைபெற்றது.

சம உரிமை இயக்கம் என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அவ்வழியாக சென்று கொண்டிருந்த பெண்கள் உட்பட பலரும் தமது கையொப்பங்களை பதிவு செய்து கொண்டதை காண முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பொது மக்களின் கையொப்பங்களைப் பெறுவதற்காக, ”வடக்கு- கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்து” என்ற தொனிப் பொருளிலான பதாகையில், வடக்கு – கிழக்கு மக்களின வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையிலும் வாசகங்கள் காணப்பட்டன.

”கைதுகள் மற்றும் காணாமல் போதல்” போன்ற சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியமும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்ததாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

தமது இந்தப் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பழனிவேல் ரிச்சர்ட் ”யுத்தம் முடிவடைந்து விட்டாலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் வாழ்வுரிமை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை, அவர்களின் வாழ்விடங்களில் தொடர்ந்தும் இராணுவம் நிலை கொண்டுள்ளது” என்றார்.

TAGS: