போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும்

Prabhakaran_son_killingசிறுவன் பிரபாகரன் பாலச்சந்திரனது படுகொலையினை அனைத்துலக சமூகம் ஒரு தனித்த நிகழ்வாக மட்டும் கொள்ளக்கூடாது. இதன்மூலம் இலங்கைத் தீவில் 2009ம் ஆண்டில் இவ்வாறு பல்லாயிரம் தமிழ்ச் சிறுவர்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளதை நம்புவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேற்குறித்த கொடூர குற்றச்செயல்களுக்கு தலைமை தாங்கி நடத்திய சிங்கள இராணுவ அரசியல் தலைவர்களை உள்ளூர் சட்டவிதிகளுக்கு அமைய உலகளாவிய நியாயத்தின் (Universal jusrisdiction) அடிப்படையில் குடிசார், குற்றவியல் விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும் என இனஅழிப்பைச் சகித்துக் கொள்ளாத தன்மை படைத்த நாடுகளுக்கு நாம் ஒருவேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

2010ம் ஆண்டில் வெளிவந்த ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையும், பின்னர் 2012ம் ஆண்டில் வெளிவந்த ஐ.நா.உள்ளக மீளாய்வு அறிக்கையும் சிறிலங்காவில் நீதியை நிலை நாட்டுவதற்கான அரசியல் சூழலோ நீதிபரிபாலன சூழலோகிடையாது எனத்தெட்டத் தெளிவாக கூறியுள்ளன என்பதனையும் உலகநாடுகளுக்கு மீண்டுமொருமுறை இத்தால் கூறிநிற்கின்றோம் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலகத் தமிழர்களை அதிர்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ள சிறுவன் பிரபாகரன் பாலச்சந்திரனது படுகொலைச் சம்பவம் தொடர்பிலான ஒளிப்படங்கள் அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றுள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலகத்தினை நோக்கி கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளது.

இக்கோரிக்கை தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்:

பிரித்தானியாவில் இயங்கும் சனல் 4 தொலைக் காட்சியின் வழியேயும், அனைத்துலக ஊடகங்கள் வாயிலாகவும் பன்னிரண்டு வயது நிரம்பிய பிரபாகரன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலான ஒளிப்படங்கள் அண்மையில் வெளிவந்துள்ளன.

இலங்கைத்தீவில் யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மானுடத்திற்க்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்புக் குற்றங்களை வெளிகாட்டும் வலுவான ஆதாரங்களாக இந்த ஒளிப்படங்கள் அமைகின்றன.

சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை பற்றிய செய்தியானது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த அநீதிகளை கோடிட்டுக் காட்டுவது போல் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. எனவே இத்தகைய போர்க்குற்றங்கள் பற்றிய அனைத்துலக விசாரணை தேவை என்ற விடயத்தை சிறுவன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட விதம் வலியுறுத்தி நிற்கின்றது.

இவ்வகையிலான நடவடிக்கைகள் அனைத்துலக சர்வதேச விதிகளுக்கு மாறாக இடம் பெற்ற போர்க்குற்றங்களாகும்.

அவை சுதந்திரமான அனைத்துலக சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்றினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நடைபெற்ற குற்றங்கள் பற்றிய உண்மையைக் கண்டறிதல் வேண்டும்.

நாகரீகம் படைத்த மனித விழுமியங்களை மதிக்கும் எந்தவொரு அரசாங்கங்கமும் இவ்வாறு அப்பாவிச் சிறுவர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அந்தப் காட்சிப்பதிவுகளை பெருமைக்குரியவையாக காட்டமுனையாது.

அண்மையில் வெளிவந்துள்ள குறித்த ஒளிப்படத்தில் காணப்படும் சிறுவனின் அப்பவித்தனமான முகத்தினைப் பாரக்கும் போது ஒருகேள்வியைக் கேட்கத் தூண்டுகின்றது. எவ்வாறு ஒருமனிதனால் இச்சிறுவனைக் கொல்வதற்காக துப்பாக்கியை இயக்க முடிந்தது என்னும் வினாவே அது!

சிறிலாங்கா அரசு குறிப்பிடுவதைப் போன்று இச்சிறுவன் போரின் போது ஏற்பட்ட குறுக்குச்சூட்டினால் கொல்லப்படவில்லை என்பதற்கு தற்பொழுது வெளிவந்துள்ள ,புதிய ஒளிப்படங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபனமாகவும் மிகத் துல்லியமாகக் காட்டிநிற்கின்றன.

சிறுவன் பாலச்சந்திரனது படுகொலையினை அனைத்துலக் ஒரு தனித்த நிகழ்வாக கக் மட்டும் கொள்ளக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. 2009ஆம் ஆண்டில் இவ்வாறு பல்லாயிரம் தமிழ்ச்சிறுவர்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்கள் என நாம் நம்புகின்றோம். அது மட்டுமன்றி இன்னும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள், தங்களது உறவினர்களையும் நண்பர்களையும் படுகொலை செய்த இராணுவத்தினது கோரப்பிடிக்குள் அகப்பட்டு அடிமைகளாக வாழ்ந்து வருகின்றார்கள்.

யுத்தத்தின் போரின் போது ஒன்றரை இலட்சம் வரையிலான அப்பாவித் தமிழ் மக்கள் முற்று முழுழதாக சிங்களமயமானவர்களைக் கொண்டுள்ள சிறிலங்காவின் ஆயுதப் படைகளினால் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனவெறி கொண்ட அரசியலும், இராணுவக் கட்டமைப்புமும் நினைத்துப் பார்க்கமுடியாத கொடூரமான குற்றங்களை தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்த அனுமதித்துள்ளது. அதன் விளைவாக, 21ம் நுற்றாண்டின் இடம்பெற்ற மிகக் கொடூரமான குற்றங்களாக இவை அமைகின்றன.

எனவே, அனைத்துலக சமூகத்திடம் வேண்டி நிற்பது நீதி ஒன்றே!

சிங்கள அரசியல், இராணுவ கட்டமைப்பினால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களைக் கருத்தில் கொண்டும் இனவெறி அடிப்படையிலான குற்றங்களையும் கருத்தில் கொண்டும் அனைத்துலக சமூகம் தமிழ் மக்களுக்கு பரிகாரம் வழங்கும் வகையில் நீதியை நிலைநாட்டக் கூடிய தீர்வு ஒன்றினை நாட்டவேண்டும் என நாம் வலியுறுத்தி நிற்கின்றோம்.

எனவே, நீதியை நிலை நாட்டும் நோக்கிலும், ஐ.நா.நாவின் தனித்துவத்தைப் பேணுவதற்காகவும், அனைத்துலகப் பாதுகாப்புத் தேவைகருதியும் ஐ.நா. பாதுகாப்புச் சபை இந்த விடயத்தைக் கவனத்தில் கொண்டு, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு உரியமுறையில் பாரப்படுத்தல் வேண்டும். அல்லது இதற்கு மாற்றாக மார்ச் மாதம் இடம்பெறும் மனிதஉரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில், இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்தி தமிழ் மக்களுக்கு நீதி வழங்கச் செய்யும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும்.

இன அழிப்பைச் சகித்துக் கொள்ளாத தன்மை படைத்த நாடுகளுக்கு நாம் ஒருவேண்டுகோளை விடுக்கின்றோம்!

மேற்குறித்த கொடூர நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கி நடத்திய சிங்கள இராணுவ அரசியல் தலைவர்களை உள்ளூர் சட்டவிதிகளுக்கு அமைய உலகளாவிய நியாயத்தின் அடிப்படையில் குடிசார், குற்றவியல் விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்பதையும் இன அழிப்பை ஏற்றுக் கொள்ளாத அணைத்து நாடுகளுக்கும் நாம் வலியுறுத்துகின்றோம்.

2010ம் ஆண்டில் வெளிவந்த ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையும், பின்னர் 2012ம் ஆண்டில் வெளிவந்த ஐ.நா.உள்ளக மீளாய்வு அறிக்கையும் சிறிலங்காவில் நீதியை நிலை நாட்டுவதற்கான அரசியல் சூழலோ நீதிபரிபாலன சூழலோகிடையாது, எனத்தெட்டத் தெளிவாக கூறியுள்ளன எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் நீதி பிற்போடப்படுதல் நீதிமறுக்கப்படுதலாகும் எனவும் கோடிட்டுக் காட்டியுள்ளது.

TAGS: