அனைத்துலக விசாரணை அவசியம்; ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

europeஇலங்கையில் இறதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் தொடர்ந்தும் பொது மக்களும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர். மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. இவற்றுக்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊக்கமும் காரணமாக அமைந்துள்ளது என்றும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளதுஇ

தெற்காசியாவுக்கான ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக் குழுத் தலைவர் ஜீன் லம்பேர்ட் இது குறித்து தெரிவிக்கையில்,
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தவேண்டும் என்று அண்மையில் ஐரோப்பிய நாடாளுமன்றம் யோசனை ஒன்றை நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொழில் வாய்ப்புக்களையும் சமூக வேலைத் திட்டங்களையும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.

எனினும், தமிழ் மக்களுக்கு அவர்கள் உரிமையுடன் வாழ்வது தொடர்பில் இன்னும் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

TAGS: