போரின்போது மோசமான போர் மீறல்கள் இடம்பெற்றுள்ளன : நவநீதம்பிள்ளை

Navanethem_Pillayகடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின்போது மோசமான போர் மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நேற்று (25.02.2013) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் பேரவையின் 22-வது கூட்டத் தொடர் ஆரம்ப உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை இறுதிக் கட்டப் போரின்போது இலட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை அரசு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை விரைவாக செயற்படுத்த வேண்டும் என நவநீதம்பிள்ளை இதன்போது கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த வேண்டுமாயின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை உடனடியாக செயற்படுத்த வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

இதேபோன்று, தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு நம்பகமானதும், ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான வகையில் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என தென் ஆபிரிக்காவும் வலியுறுத்தியுள்ளது.

TAGS: