காமன்வெல்த் அமைப்பு தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் இதுவரை காட்சிப்படுத்தியிருந்த ‘CHOM 2013, SriLanka’ இலங்கையின் அனுசரனை இலச்சினையை நீக்கிவிட்டு, ‘CHOGM 2011 , AUSTRALIA” என்ற இலச்சினையை காட்சிப்படுத்தியுள்ளது.
காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கடந்த பெப்ரவரி 10-13 தேதிகளில் இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அதன்போது, திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய அமைப்பின் தலைவர்களின் மாநாடு வருகிற நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் சர்மாவை மேற்கோள் காட்டி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
எனினும், “இலங்கையில் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டை நடத்த அதிகாரப்பூர்வ முடிவுகள் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என சர்மா தெரிவித்துள்ளார்” என பெப்ரவரி13-ஆம் தேதி பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்தின் பணிமனை, தொடர்பாடல், மக்கள் தொடர்புப் பிரிவின் உயரதிகாரியான அதிகாரப்பூர்வ பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.