அம்னோ மீது பழி போடும் தியான் சுவா-வை நஜிப் சாடினார்

najibசபா லஹாட்  டத்துவில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களுடன் துப்பாக்கிச் சண்டைக்கு அம்னோ திட்டமிட்டதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா குற்றம் சாட்டி விடுத்த அறிக்கையை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை ஒட்டி மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் நடத்தும் வெறுக்கத்தக்க  அரசியல் ஆட்டம் அந்தக் குற்றச்சாட்டு என அவர் சொன்னார்.

“அரசாங்கம் அந்த நாடகத்தை நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அது பெரிய பொய். மெமாலி சம்பவத்தில் கூட எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது பழி போட்டன.”

“அரசாங்கத்தில் உள்ள நாங்கள் அது போன்ற காரியங்களைச் செய்வதில்லை. நாங்கள் நமது பாதுகாப்பை அரசியலாக்குவதில்லை. ஏனெனில் அதில் மனித உயிர்கள் சம்பந்தப்பட்டுள்ளன,” என நஜிப் கங்காரில் பெர்லிஸ் மாநில நிலையிலான ‘வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன” என்னும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

(1985ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி நிகழ்ந்த மெமாலி சம்பவத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர். பலர்

காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர். கெடா கம்போங் மெமாலியில் சமய அறிஞரான இப்ராஹிம் லிபியா என அழைக்கப்பட்ட இப்ராஹிம் மாஹ்முட்டைப் போலீசார் கைது செய்ய அப்போது முயன்றனர்)

நஜிப் தமது மனைவி ரோஸ்மா மான்சோருடன் பெர்லிஸுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நிகழ்வில் பெர்லிஸ் மந்திரி புசார் முகமட் ஈசா சாபுவும் கலந்து கொண்டார்.