அமெரிக்க ஆலோசகர்கள் இஸ்ரேல் ஆதரவாளர்கள் என்பது பிரதமருக்குத் தெரியுமா ?

anwarஅரசியல் எதிரியான அன்வார் இப்ராஹிமைத் தாக்குவதற்கு தான் நியமித்த அமெரிக்க ஆலோசகர்கள் இஸ்ரேலிய ஆட்சியின் தீவிர ஆதரவாளர்கள் என்பது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்துக்குத் தெரியுமா என இன்று பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது.

பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நஸ்மி நிக் அகமட் அந்தக் கேள்வியை தொடுத்துள்ளார்.

முன்பு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்-ஷின் சொற்பொழிவு எழுத்தாளரான ஜோசுவா ட்ரெவினோவை அப்கோ வோர்ல்ட் ஒயிட் நிறுவனம் வழியாக மக்கள் வரிப்பணத்தில் நியமித்தது சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு நஜிப் பதில் சொல்ல வேண்டும் என  நிக் நஸ்மி கேட்டுக் கொண்டார்.

“நியமிக்கப்பட்ட பல ஆலோசகர்கள் இஸ்ரேலுடைய தீவிர ஆதரவாளர்கள் என்பது அரசாங்கத்துக்குத் தெரியாதா ?” என அவர் வினவினார்.

அந்த நியமனங்கள் பாலஸ்தீனர்களுக்குப் பாதகமானது என நிக் நஸ்மி மேலும் சொன்னார்.