ராஜபக்சேவை காப்பாற்ற அமெரிக்கா சென்ற சுப்பிரமணிய சாமி

rajapaksa subramaniஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி அவசரமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். ஜெனிவாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து அமெரிக்கா சார்பில் தாக்கல் செய்யப்படும் தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், வாஷிங்டனில் அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சுப்பிரமணியசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

சுப்பிரமணியசாமியின் பூர்வீகம் மதுரைஅருகே உள்ள சோழவந்தான்.  அவருக்கு தமிழும் சரியாக தெரியாது.  தமிழர்களின் உணர்வும் புரியாது.

இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை  உலகம் முழுவதும் உள்ள மனிதநேய  ஆர்வலர்கள் வன்மையாக கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில் இலங்கை சென்று ராஜபசேவை சந்தித்து உரையாடினார் சுப்பிரமணிய சாமி.

ஜெனிவாவில்நடக்கும் ஐநா மனித உரிமைகள் மன்றக்கூட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு மொத்தம் உள்ள 47 நாடுகளில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ள நிலையில் இதை எப்படி தோற்கடிக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் நீர்த்துப்போக  வைக்க வேண்டும் என்பது குறித்து ராஜபக்சேவும், சுப்பிரமணியசாமியும் பல்வேறு கோணங்களில் கலந்துரையாடினர்.

சுப்பிரமணியசாமிக்கு பல்வேறு நாடுகளில் தொடர்பு உண்டு. அவர் பல்வேறு நாடுகளின்  உளவு அமைப்புகளோடு நெருக்கமான தொடர்பு வைத்துள்ளார்.  இந்நிலையில், ராஜபக்சேவை எப்படியாவது இக்கட்டான நிலையில்  இருந்து காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன்  சுப்பிரமணியசாமி அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள கென்னடி விமான நிலையத்தில் இறங்கிய அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர்.  பிறகு, தலைநகரான வாஷிங்டனுக்கு சென்று அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சுப்பிரமணியசாமியின் தரகு வேலை பலிக்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.  இதற்கிடையில் சுப்பிரமணிசாமியின் செயல்பாட்டிற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

TAGS: