‘காணாமல் போனோரின்’ உறவினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

vavunia disappeared road blockadeஇலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் தங்களது உறவுகளை கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரியும், அரசால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனோரை விடுதலை செய்யக்கோரியும், தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வடக்கிலிருந்து வந்த பலரை வவுனியாவில் போலிசார் தடுத்து நிறுத்திய நிலையில், கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால், அரசுக்கு ஆதரவான மற்றொரு ஆர்ப்பாட்டத்துக்கு போலிசார் அனுமதி கொடுத்திருந்தனர்.

காணாமல் போயுள்ள தமது பிள்ளைகள், கணவன்மாரை விடுதலை செய்யக் கோரியும், ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் கவனத்தை ஈர்ப்பதற்குமாக நேற்று புதன்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக கொழும்பு செல்ல முயன்றபோது, வவுனியாவில் வைத்து செவ்வாய் இரவு தடுத்து வைக்கப்பட்ட வடபகுதி மக்கள் வவுனியாவில் அமைதிப் பேரணி நடத்தி, ஏ 9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்து வவுனியா அரசாங்க அதிகாரிகளிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

TAGS: