இத்தாலியின் முன்னாள் பிரதமரான சில்வியோ பெர்லுஸ்கோனிவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் முன்னாள் பிரதமரான சில்வியோ பெர்லுஸ்கோனிவுக்கு (76) சொந்தமான பத்திரிகையில் போலிஸ் தகவல் பரிமாற்றம் பற்றிய செய்தி வெளியானது.
இது தொடர்பாக, ரோம் நகரில் உள்ள நீதிமன்றத்தில் பெர்லுஸ்கோனி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டின் சட்டப்படி, தண்டனை பெற்றவரின் வயது 75-க்கு அதிகமாக இருந்து அவருக்கான தண்டனை காலம் 2 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தால் அவர் சிறைக்கு போக வேண்டியது இல்லை.
எனவே இந்த வழக்கில் பெர்லுஸ்கோனி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தால் அவரது தண்டனை இரத்து ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமராக இருந்த போது 17 வயது விபசார அழகியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டது தொடர்பாகவும், வரி மோசடி தொடர்பாகவும் பெர்லுஸ்கோனி மீது மேலும் இரு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
அந்த வழக்குகளிலும் இந்த மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.