‘இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் செயற்பட்டவர்கள் நாடு திரும்ப முடியாதாம்’

piyasri_vijenayakaஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு எதிராக செயற்பட்ட யாரும் மீண்டும் நாட்டிற்குள் வர முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயாலாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

தேவையென்றால் இந்தியாவில் தமிழீழம் ஒன்றை அமைத்துக் கொள்ளலாம். இலங்கையில் அந்த பேச்சுக்கே இடமில்லை என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கூட்டு முயற்சியே ஐ.நா. மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களாகும். எனவே இதனை அடியோடு நிராகரித்து 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஒழித்து, வடமாகாண சபை தேர்தலை அரசு நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடகிழக்கில் தமிழ் தாய்நாடு ஒன்றை உருவாக்க சிலர் முன்வந்திருப்பதாகவும் அதற்கு ஒருபோது இடமளிக்கக் கூடாதெனவும் பியசிறி கூறியுள்ளார்.

வடக்கில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள இடங்களை மாற்றியமைக்க அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை என தமிழர்களுக்கு எதிராக இனவாதப்போக்கை கடைபிடிக்கும் நபரான பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

TAGS: