அன்வார் பெர்மாத்தாங் பாவில் மீண்டும் போட்டியிடாமல் போகலாம்

1anwar

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்,  பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு எம்பி ஆவார். ஆனால், வரும் தேர்தலில் அவர் அத்தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார் என்பது உறுதி இல்லை.  இதை அவரே கூறியுள்ளார்.

“பேராக்கில் அல்லது சிலாங்கூரில் போட்டியிமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  இன்னும் நான் முடிவு செய்யவில்லை”, என்றவர்  இன்று பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பெர்மாத்தாங் பாவில் போட்டியிட வேறு பல வேட்பாளர்கள் இருப்பதாக அன்வார் கூறினார். ஆனால், அவரின் மகள் நுருல் இஸ்ஸா அன்வார் அவர்களில் ஒருவராக இருக்க மாட்டார் என்பது மட்டும் தெரிகிறது.

“அவர் லெம்பா பந்தாயில் மும்முரமாக இருக்கிறார். அவரைத் தொந்திரவு செய்ய வேண்டாம்”, என்றார்.

முன்னதாக அன்வார், சரவாக் பிகேஆர் தலைவர் பார் பியானுடன் சேர்ந்து ‘மாற்றம் காணத் தயாராகும் சரவாக்’ என்னும் வலைத்தளத்தைத் தொடக்கி வைத்தார்.