எம்ஏசிசி, Global Witness எனப்படும் அமைப்பு கூறுவது மீது ‘உரிய நடவடிக்கை’ எடுக்கும்

taibஎம்ஏசிசி என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடவடிக்கை Global Witness எனப்படும் அரசு சாரா  அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் மீது ‘உரிய நடவடிக்கை’ எடுக்கும்.

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்டின் உறவினர்கள் எனக் கூறப்பட்டவர்கள் திரைக்குப் பின்னால்  மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் பற்றி அந்த அமைப்பு தகவல் வெளியிட்டிருந்தது.

தாயிப் மீது ஏற்கனவெ கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் கோப்பு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் எம்ஏசிசி-யின் விசாரணைப் பிரிவு இயக்குநர் முஸ்தாபார் அலி குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை தொடருகின்றது எனக் கூறிய அவர், இப்போது புதிதாக கிடைத்துள்ள ஆதாரத்தைக் கொண்டு அதற்கு ஏற்ப உரிய நடவடிக்கையை எம்ஏசிசி எடுக்கும்,” என்றும் முஸ்தாபார் சொன்னார்.

சட்டத்தைக் கீழறுப்புச் செய்வதின் மூலம் வெட்டு மர அனுமதிகளை விற்பதின் ஆதாயம் பெறுவதற்கு தாயிப் உறவினர்கள் பயன்படுத்தும் நடைமுறையை ஆவணப்படுத்துவதற்காக Global Witness ரகசிய நடவடிக்கை எடுத்தது.

அந்த உறவினர்கள் தமது தரகர்கள் எனக் கூறப்படுவதை தாயிப் நேற்று மறுத்துள்ளார்.

 

TAGS: