கருணாவின் பிரிவுதான் போரை வெற்றி பெற காரணமாம்; சொல்கிறார் சிங்கள அமைச்சர்

karunaதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசில் இணைந்திராவிடில் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது என இலங்கை கடற்தொழில் நீரியல் வளத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் துறை கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது:

ஆனையிறவு சமரில் விடுதலைப் புலிகளின் வெற்றியை கருணாவே ஈட்டிக் கொடுத்தார். இதுபோன்று புலிகளின் பல வெற்றிகளுக்கு அவர் காரணமாக அமைந்தார்.

டி.பி.விஜயதுங்க ஜனாதிபதியாக இருந்து போதும், 1994ம் ஆண்டிலும் கிழக்கை  இலங்கை படையினரால் மீட்கப்பட்டிருந்த போதிலும், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தொப்பிகல பிரதேசம் படையினரால் மீட்கப்படவில்லை. அங்கு படையினரால் நுழையக் கூட முடியவில்லை. அந்தளவுக்கு புலிகளின் இராணுவ கட்டமைப்பு அங்கு பலமாக இருந்தது. அதற்கு காரணம் கருணாதான்.

ஆனால் கருணா அந்த அமைப்பில் இருந்து விலகிய பின்னர், கிழக்கு மகாணம் உள்பட புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகள் இலங்கை படையினரால் மீட்க முடிந்தது.

போரின் அரசாங்கத்துக்கு எதிராக போரிட்ட கருணா நாடாளுமன்றத்தில் இருக்கிறார். ஆனால் யுத்தத்தை வெற்றிகொண்ட சரத் பொன்சேகா சிறையில் இருக்கிறார் என்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் குரலெழுப்பினர். கருணா அரசுடன் இணைந்திருக்காவிட்டால் இவ்வளவு விரைவாக போரை முடித்திருக்க முடியாது என்று அவர்களுக்கு நான் பதிலளித்தேன் என்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

என்னதான் இந்த சிங்கள அமைச்சர் கூறினாலும் துரோகத்தனத்தினால் சரித்திரத்தில் இடம்பெற்ற ஒரு கயவன் கருணா என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை!

TAGS: