இழந்த உயிர்களை தவிர்த்து ஏனைய அனைத்தையும் தமிழர்களுக்கு வழங்க தயாராம்!

Rajapaksaபோரினால் இழந்த உயிர்களை தவிர்த்து ஏனைய அனைத்தையும் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயார் என அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

போரினால் பறிக்கப்பட்ட சொந்த இடங்களின் உரிமையை மட்டுமின்றி அந்த மக்கள் இதுவரை கண்டிராத அபிவிருத்தியையும் வழங்க முடியுமென மகிந்த ராஜபக்சே சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசத்திற்கு மகுடம்  கண்காட்சியை முன்னிட்டு இலங்கையின் கிழக்கே அம்பாறை ஹாடி தொழில்நுட்ப கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும்போதே மகிந்த ராஜபக்சே இதனைக் கூறியுள்ளார்.

யாருடைய சொந்த இடங்களை கைப்பற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் தயாரில்லை; உங்களுக்கு வேறு நாடு இல்லை, உங்களது தாய் நாடு இதுவாகும். இந்த நாட்டை கட்டியெழுப்பி உங்களது உரிமைகளை வழங்குவதே எமது நோக்கம்.

உங்களில் எவரையும் இந்த தாய் நாட்டின் தங்கியிருப்பவர்களாக்க( boarding) திட்டமிடவில்லை. நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வளங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அதிபர் மகிந்த ராஜபக்சே இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

TAGS: