பெர்க்காசா என்ற Pertubuhan Pribumi Perkasa Malaysia அமைப்பு ‘சிலாங்கூரைக் காப்பாற்றுங்கள்’ என்னும் இயக்கம் தொடர்பான தனது நிகழ்வுகளை நிறைவு செய்யும் வகையில் ஏப்ரல் 6ம் தேதி கூட்டம் ஒன்றை நடத்த எண்ணியுள்ளது.
அன்றைய தினம் ஷா அலாம் செக்சன் 2ல் பிற்பகல் மூன்று மணிக்கு அந்தக் கூட்டம் தொடங்கும் என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறினார்.
அவர் ஷா அலாமில் அந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டுக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
அந்தக் கூட்டத்தில் உரையாற்றுமாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அழைக்கப்படுவார் என்றும் இப்ராஹிம் தெரிவித்தார். மொத்தம் 15 ஆயிரம் பேர் முதல் 20 ஆயிரம் பேர் வரை அதில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெர்னாமா