சீயோல்: வடகொரியா தனது நான்காவது அணுகுண்டு சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது. வடகொரியா, தற்போது ஐ.நா.மற்றும் சர்வதேச விதிமுறைகளை மீறி கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது மூன்றாவதுஅணு சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்டநாடுகள் கண்டனம் தெரிவித்தன.
தற்போது தென்கொரிய எல்லையில் ராக்கெட் மற்றும் அணு ஆயுதங்களை குவித்து அமெரிக்காவை மிரட்டி வருகிறது.
இந்நிலையில் தென்கொரியா, ஊடகங்களில் வெளியான செய்தியில், தென்கொரியா உளவு அமைப்பு இடைமறித்து கேட்ட தகவலில், மறைந்த வடகொரியா நிறுவன தலைவர் இரண்டாம் கிங் சாங், பிறந்த நாள் வரும் 15-ம் தேதியன்று, அந்நாடு தனது நான்காவது அணு சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.