வடகொரியா நடுத்தர தூர எவுகணை ஒன்றை சோதனை செய்வதற்கான சமிஞ்ஞைகளுக்கு மத்தியில், தென்கொரியா தனது பாதுகாப்பு உஷார் நிலையின் அளவை அதிகரித்துள்ளது.
3000 கிலோ மீட்டர் தூரம் வரை போகக்கூடிய, முன்னெப்போதும் சோதனை செய்திராத, ஒரு வகை ஏவுகணைக்கு எரிபொருள் நிரப்பி வடகொரியா தயார் நிலையில் வைத்திருப்பதாக அமெரிக்க, தென்கொரிய வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏதாவது ஏவுகணைச் சோதனை நடந்தால், அது ஐநா பாதுகாப்புக் கவுன்ஸிலின் தீர்மானத்தை மீறிய, ஒரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகவே பார்க்கப்படும் என்றும், அந்தச் சோதனையில் ஏதாவது தவறு நடந்தால் அன்றி, அதில் பெரிய, குறுகிய கால பாதுகாப்பு முக்கியத்துவம் எதுவும் கிடையாது என்றும் சியோலில் இருக்கின்ற பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சியோலின் கடந்த மாதம் சில முக்கிய வங்கிகள் மற்றும் ஊடகங்களின் கணினி வலையமைப்பை தாக்கிய சைபர் தாக்குதல்கள் குறித்து தென்கொரியா அதிகாரபூர்வமாக வடகொரியா மீது குற்றஞ்சாட்டியுள்ளது.