உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு இன்னர் சிட்டி பிரஸ் கண்டனம்

uthayan_officeயாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்த மூவர் அடங்கிய துப்பாக்கித்தாரிகளே அங்கு கடமையிலிருந்த காவலாளியை அச்சுறுத்தி துரத்திவிட்டு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், உதயன் இணையத்தள அறைக்குள்ளும் புகுந்து அங்கிருந்த இலத்திரனியல் பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, உதயன் பத்தரிகை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச ஊடகமான இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எந்த கண்டனத்தையும் வெளியிடாமை குறித்தும் வருத்தம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மூன்றாம் திகதி உதயன் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்னர் சிட்டிபிரஸ் ஐக்கிய நாடுகளின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பி இருந்தது. எனினும் இதற்கு தம்மிடம் பதில்கள் எவையும் இல்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உதயன் பத்திரிகை அலுவலகம் தீவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மௌனமாக இருப்பது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: