அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி:141 காயம்

boston bomb blastபாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தது.போட்டி முடியும் நேரத்தில் ‌வெடிகுண்டு வெடித்தது.இந்நிலையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையடுத்து சிதறி ஒடினர். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்‌ந்தது. தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்ததாக பாஸ்டன் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.

இச்சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள் மேலும் 141பேர்வரை காயமாடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனை‌யடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

திங்களன்று 23 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடந்துகொண்டிருந்த போது ‌குண்டு வெடிப்பு நடந்தது. இங்கு நடைபெறும் மாரத்தான் மிகவும் தொண்மை வாய்ந்தது மற்றும் புகழ்‌பெற்றது ஆகும். கிட்டதட்ட மாரத்தான் முடியும் போது தான் குபிளாசா நட்சத்திர ஒட்டல் அருகே குண்டு வெடிப்பு நடந்தது. இச்சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள் 141க்கும் மேற்படடோர் காயமடைந்துள்ளார்கள்.

இதில் 15 பேர் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெ‌டிக்கச்செய்த வெடிகுண்டு சிறிய நடுத்தர உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதான் என பாஸ்டன் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் 25லிருந்து 30 பேர் வரை ஒரு கால் மற்றும் இரு கால்களை இழந்திருப்பதாக டாக்டர்கள் த‌கவல் தெரிவித்துள்ளனர்.

பாஸ்டன் தொடர் குண்டு தாக்குதலால் நியூயார்க்,வாஷிங்டனுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒபாமா பேச்சு: இந்த நாச வேலையை யார்? ஏன்? எதற்கு? செய்தார்கள் என தெரியவில்லை இத்தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து தண்டணை வழங்குவோம். காயமடைந்தவர்களுக்காக நாம் அனைவரும் பிராத்தனை செய்வோம் என்றார்.

பான் கீ-மூன் கண்டனம்: இத்தாக்குதலை நடத்தியவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஐ.நா.பொதுச்செயலர் பான் கீ-மூன் தெரிவித்துள்ளார்.