பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின் பிஎன் வேட்பாளராக 13வது பொதுத் தேர்தலில் ஷா அலாம் எம்பி காலித் சாமாட்டை எதிர்த்து நிறுத்தப்படுவார்.
கூலிம் பண்டார் பாரு எம்பி-யுமான சுல்கிப்லி பிகேஆர் கட்சியிலிருந்து விலகி சுயேச்சை எம்பி ஆனார். சிலாங்கூர் பிஎன் தலைவருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அவரது பெயரை அறிவித்தார்.
சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் தமது செப்பாங் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள அங்கு மீண்டும் களமிறக்கப்படுகிறார்.
பராமரிப்பு அரசாங்கத்தின் விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர் நோ ஒமார் தஞ்சோங் காராங்கில் மீண்டும் போட்டியிடுவார்.
அம்னோவின் கீழ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட Glomac Bhd தலைமை நிர்வாகியும் சிலாங்கூர் அம்னோ பொருளாளருமான பாத்தே இஸ்காண்டார் மான்சோர் இன்று காலை அரிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இல்லை.
அதனால் மே 5 தேர்தலில் பிஎன் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றினால் யார் அந்த மாநிலத்துக்கு மந்திரி புசாராக பொறுப்பேற்பார் என்ற ஊகங்களை மேலும் அதிகரித்துள்ளது.