வரும் தேர்தலில், கெடா அம்னோ தொடர்புக்குழு துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதிர் ஆயர் ஈத்தாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என பிஎன் அறிவித்துள்ளது.
இவ்வறிவிப்பு. தேர்தலில் பிஎன் வென்றால் அந்த ஜெர்லுன் எம்பிதான் கெடா மந்திரி புசார் என்ற வதந்திக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
ஆயர் ஈத்தாம் சட்டமன்றத் தொகுதி, ஜெர்லுன் நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான் அமைந்துள்ளது.
இதனிடையே, கெடா பிஎன் தொடர்புக்குழு தலைவர் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபா, பகார் பாத்தா சட்டமன்றத் தொகுதியைத் தற்காக்கப் போட்டியிடுவார்.