தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே அமைப்பு, அரசியல் வன்செயல்களுக்கு எதிராக போலீசார் விரைந்து நடவடிக்கை எடுப்பர் என்று அறிவித்துள்ள பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீசைப் பாராட்டியுள்ளது.
அதேவேளை, விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அரசியல் வன்செயல்கள் மீதான போலீஸ் விசாரணை குறித்த தகவல்களைத் தொடர்ந்து இற்றைப்படுத்தி வரவேண்டும் எனவும் அது கேட்டுக்கொண்டது.
“வழக்குகளை அப்படியே போட்டு வைத்துவிடக்கூடாது”, என பராமரிப்பு அரசின் அரசியல் வன்செயல்களையும் நெறிமுறை மீறல்களையும் கண்காணிக்கும் பெர்சே துணைக்குழுவின் இணைத் தலைவரான ஐரின் பெர்னாண்டஸ் கூறினார்.
போலீசார் தங்கள் விசாரணைகளில் “பாரபட்சம்” காண்பிக்கக்கூடாது என்றும் ஐரின் கேட்டுக்கொண்டார்.