கேமிரன் ஹைலண்ட்ஸில் பழனிவேலை எதிர்த்து எம் மனோகரன் போட்டி

manokaranநடப்பு தெலுக் இந்தான் டிஏபி எம்பி எம் மனோகரன், கேமிரன் ஹைலண்ட்ஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கான  போராட்டத்தில் மஇகா தலைவர் ஜி பழனிவேலை எதிர்த்துக் களமிறங்குவார்.

டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று அந்தத் தகவலை அறிவித்தார்.

பழனிவேல் மஇகா தலைவராகவும் கூட்டரசு அமைச்சராகவும் இருப்பதால் அந்த புகழ்பெற்ற விடுமுறை
இலக்கு முக்கியமான போராட்டக் களமாக மாறும் என லிம் சொன்னார்.

நாடாளுமன்றத்தில் இந்திய சமூகப் பிரச்னைகளை மனோகரன் தீவிரமாக எழுப்பி வருவதால் அவர் கேமிரன் ஹைலண்ட்ஸில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டதாக அங்கிருந்த டிஏபி உதவித் தலைவர் எம் குலசேகரன் தெரிவித்தார்.manokaran1

“கேமிரன் ஹைலண்ட்ஸுக்குச் செல்வதற்கு அவர் தகுதியானவர், பொருத்தமானவர். அவருக்கு களத்தில் பல  தொடர்புகளும் உள்ளன,” குலசேகரன் கோலாலம்பூரில் டிஏபி தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

என்றாலும் கேமிரன் ஹைலண்ட்ஸ் தொகுதியை பிஎன்-னிடமிருந்து கைப்பற்றுவது மிகவும் சிரமமாக இருக்கும்  என்பதை குலசேகரன் ஒப்புக் கொண்டார்.