இந்திய சமூகத்தை அம்னோ ‘இன ஒழிப்பு’ செய்வதாகப் பல ஆண்டுகள் குற்றம் சாட்டி வந்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, ஆளும் கட்சியுடன் தாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவுகள் ‘வரலாற்றுப்பூர்வமானவை’ எனத் தற்காத்துப் பேசியதுடன் பக்காத்தான் ராக்யாட் மீது பழியும் போட்டுள்ளார்.
ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை பிஎன் தலைவர் நஜிப் ரசாக் நேற்று அங்கீகரித்தது ‘கற்பனை செய்ய முடியாத ஒன்று’ எனக் குறிப்பிட்ட வேதமூர்த்தி, அரசாங்கத்தை மாற்றுவது ஹிண்ட்ராப் அமைப்பின் நோக்கம் அல்ல, மாறாக இந்திய சமூகத்தை மேம்படுத்துவதை நாடுவதே நோக்கம் என்றும் சொன்னார்.
“இந்த நாட்டை ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அது முக்கியமல்ல” (இராமயணக்
கதாபாத்திரங்கள்).
பக்காத்தான் ராக்யாட் பல சௌகரியமான, சுயநலனைக் கருத்தில் கொண்ட பல காரணங்களைக் கூறி அந்த ஆவணத்தில் கையெழுத்திட மறுத்து விட்டது. அதே வேளையில் பிஎன் அதனை செய்ய முன் வந்துள்ள முற்றிலும் முன்னுதாரணம் இல்லாததாகும்,” என வேதமூர்த்தி இன்று விடுத்துள்ள ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நீ யுமா , இதற்காகதான் இந்த நாடகமா ?. வாழ்க வளமுடன் .