பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான ஜெனரல் முஸாரப் அவர்கள் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் அவரது சொந்தவீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் 6 வருடங்களுக்கு முன்னதாக நீதிபதிகளை சட்டத்துக்கு விரோதமாக தடுத்து வைத்தது குறித்து நீதிமன்ற வழக்கு ஒன்றில் அவர் முன்னதாக ஆஜராகியிருந்தார்.
அப்போது அந்த நீதிபதிகள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அவர்களது பாதுகாப்புக்காக விதிக்கப்பட்டன என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று முஸாரப் கூறியுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஒன்றின் முன்பாக அவர் ஞாயிறன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.