தேர்தலை முன்னிட்டு ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார பதாகைகளில் தமிழ்மொழி சிதைக்கபட்ட விடயமே இதுவரை பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தமிழனின் பண்பாடும், நாகரிகமும் அவமானப்படுத்தப்பட்டுள்ள விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
(காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்)
உலகத்திற்கே நாகரிகத்தை கற்றுத் தந்தவன் தமிழன் என நாம் பெருமிதம் கொள்கிறோம். ஆனால், அவன் இடது கை (பீச்சாங் கை)-யால் உணவு உண்பதுபோல் படத்தை பெரிதாக பதாகையில் அச்சிட்டு தேசிய முன்னணி, தமிழன் பண்பாடு, நாகரிகத்தைக் கேள்விக் குறியாக்கி, அவமானப்படுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் பொருத்தப்பட்டிருக்கும் தேசிய முன்னணி பதாகைகளில் இடது கையால் இந்திய முதியவர் ஒருவர் உணவு உண்ணும் படம் அச்சிடப்பட்டுள்ளது.
இப்படத்தை பார்த்து கொதித்துப்போன பூச்சோங்கை சேர்ந்த பி. சண்முகம் என்பவர், உடனடியாக பிரிக்பீல்ட்ஸ் காவல்துறையில் சென்று புகார் அளித்துள்ளார். அத்துடன், காவல்துறையினரின் அறிவுரைக்கு அமைய சுற்றுலாத்துறை உட்பட சம்பந்தபட்ட அரசு துறைகளின் வாயில் கதவுகளை தட்டி புகார் செய்து தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
தனியொருவராக சம்பந்தப்பட்ட அனைத்து அரசு துறைகளின் பணிமனைகளுக்குச் சென்று அவர்களிடம் தனது ஆதங்கத்தை தெரிவித்த சண்முகம், தேசிய முன்னணியின் பாதகைகளின் பயன்படுத்தப்பட்டுள்ள ‘இடது கை விளம்பரம்’ தன்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் இழிவுபடுத்தி காயப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழையும் தமிழனின் பண்பாட்டையும் அவமானப்படுத்தும் வகையிலான அனைத்துப் பதாகைகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக அகற்றவேண்டும். அதுவரை தாம் ஓயப்போவதில்லையெனவும் சண்முகம் செம்பருத்தி இணையத்தளத்திடம் கூறினார்.
தேர்தல் காலங்களில் ஆதரவு கொடுங்கள் என இந்தியர்களை தேடி வரும் தேசிய முன்னணி, 55 வருடங்களாக தொடர்ந்து இந்தியர்களை ஏதோ ஒரு வைகயில் இழிவுபடுத்தி வருகிறது.
ஆட்சியில்லாத இந்த சூழ்நிலையிலே இவ்வாறு இந்திய சமுதாயத்தை இழிவுபடுத்தும் தேசிய முன்னணி, நாளை பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தால் நம்மை இன்னும் இழிவுபடுத்தமாட்டர்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே, இதுபோன்ற சம்பவங்களுக்கு நாம் அனைவரும் ஒரு முடிவு கட்டவேண்டும் என்று சண்முகம் தெரிவித்தார்.
இந்த சரவணன் குதிரை போல் கனைத்து என்ன கூத்தாடினாலும் கழுதை குதிரையாகாது. என்பது இவனுக்கு தெரியில, சார், .
வாழ்துக்கள் சண்முகம் அவர்களே . உமக்கு என் பரிபூண நல்லாசிகள்
இந்த படத்தை திருப்பி காட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர் அணிந்திருக்கும் சட்டையை பார்த்தால் அவர் இடது கை பழக்கம் உள்ளவராக தெரியவில்லை.
saya janji . இதோ bn வென்றால் கழுவுரகையில் உங்களை தின்ன வைப்பேன் என்று உறுதிமொழி கூறுகிறேன்.என்று bn தெளிவாக போஸ்டர் ஒட்டி சொல்லிட்டாங்க.எங்கல் ஓட்டு………………..செருப்படி தமிழா நமக்கு செருப்படி!!!!!
அந்த முதியோருக்கு சுய நினைவு இல்லயோ .. அல்லது இந்த விளம்பரத்தை வெளியிடு காண உதவிய அனைவரும் இடது கை பழக்கம் உள்ளவர்களோ , சாப்பிட , கழுவ ? கர்மா கர்ம . எதை செய்வதாக இருந்தாலும் இந்த மட பி ன் முட்டாள்கள் அவர்கள் இஷ்டத்துக்கு செய்து விட்டு மன்னிப்பு கேட்பார்கள் . நாம் தான் மறதிக்கு சொந்தகாரர்கள் ஆயிற்றே .
எப்படியா இப்படி உன்னிப்பா கவனிக்கரிங்க? புல்லரிக்குது போங்க. பாவம் போட்டோ எடுத்தவன் அதோ கதி…
மானம் ரோஷம் எல்லாம் நமக்கு ஏன்? நாம் தான் நம் மானத்தை 56 வருடங்குகளுக்கு முன் அடகு வைத்து விட்டோமே.என்ன பட்டாலும் நம் சமுதாயம் திருந்தாது.சண்முகம் உமக்கு என் தனிப்பட்ட அனுதாபங்கள். உணர்வுள்ள மனிதன் எவனுக்குமே ரோஷம் வரத்தான் செய்யும். இங்கே குறிப்பிடிருப்பது போல் அவர் படம் வேணுமென்றே திருப்பபட்டிருக்கிறது. இது திட்டமிட்டு நம்மை அவமானபடுதுதல். இன்னும் அவங்கள் கால்களையே நக்கிகொண்டிருக்கும் கேடு கேட்ட நாய்களே ஒரு கணம் சமுதாயத்டிக்காக சிந்தியுங்கள். ரத்தம் கொதிக்கிறது .
நன்றி..சன்,ப்ரோ அவர்களே…!நீங்கதான் உண்மையிலே தமிழன்,அங்கயும்,இருக்குதுங்களே ம இ கா கூட்டம் கொஞ்சம் கூட தமிழ் சொரணை இல்லாத ஜென்மங்கள்.பின்னுக்கு வாள்ளட்டும் கூட்டம்….