சபாவிலும் பினாங்கிலும் வாக்குகள் வாங்கப்படும் சம்பவங்களை தான் ஆவணப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியான பிகேஆர் இன்று அறிவித்துள்ளது.
அந்தச் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை விரைவில் வெளியிடப் போவதாகவும் அது தெரிவித்தது.
“எங்களிடம் பற்றுச்சீட்டுக்கள் உள்ளன. பினாங்கில் 50 ரிங்கிட்டும் சபாவில் 1,000 ரிங்கிட்டும்
கொடுக்கப்பட்டுள்ளன,” என்று பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சொன்னார்.
“எங்களிடம் அதற்கு ஆதரவான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் விரைவில்
வெளியிடுவோம்,” என்றார் அவர்.
(இன்னும் தொடரும்)