வெள்ளை மாளிகை குண்டு வெடிப்பில் ஒபாமா காயம்?

obama injured“வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டு வெடிப்புகள்: ஒபாமா காயம்” என்ற செய்தியை டுவிட்டரில் பார்வையிட்ட பலர் நேற்று  அதிர்ந்துதான் போய்விட்டனர்.

ஆம்,  AP (Associated Press) ஊடக நிறுவனத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கிலிருந்தே இச் செய்தி நேற்று வெளியாகியிருந்தது. இது உலகம் பூராகவும் பெரும் பரபரப்பை இச்செய்தி ஏற்படுத்தியிருந்தது.

எனினும் ஹெக்கர்களின் கைவரிசையே இச் செய்தி என்பது பின்னர் தெரியவந்தது. பின்னர் இச்செய்தி பொய்யானது என ஏ.பி. அறிவித்தது. ஹெக்செய்யப்பட்ட தனது டுவிட்டர் கணக்கினை தடைசெய்வதாக ஏ.பி. அறிவித்துள்ளது.

இதேவேளை ஹெக்கிங் நடைபெறுவதற்கு முன்னர் ஏ.பி. பணியாளர்கள் சிலருக்கு பிஸிங் எனப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய  மின்னஞ்சல்களும் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுமட்டுமன்றி இத்தகவல் பரவியதும் டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு (Dow Jones Industrial Average)  சரிவடைந்திருந்தது. எனினும் பின்னர் வழமைக்கு திரும்பியது.

இவ் ஹெக்கிங் நடவடிக்கைக்கு சிரிய நாட்டைச் சேர்ந்த Syrian Electronic Army என்ற அமைப்பு உரிமைகோரியுள்ளது. இவ் அமைப்பு சிரிய ஜனாதிபதி பஷார் அல்- அசாத்துக்கு ஆதரவானதென தெரிவிக்கப்படுகின்றது. இதே குழுவே சி.பி.எஸ் செய்திச் சேவையின் டுவிட்டர் கணக்கினை கடந்த வாரம் ஹெக் செய்திருந்தது. தற்போது ஏ.பி. யை குறிவைத்து போலியான செய்தியையும் பரப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.