ஒரு வாரகாலமாக பிகேஆருடனும் பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்)-வுடனும் பேச்சு நடத்திப் பார்த்த பாஸ் முடிவில் கோட்டா டமன்சாராவில் போட்டியிடுவதினின்றும் பின்வாங்கியது.
“அந்த இடத்தை பிகேஆரிடமே கொடுக்கிறோம்”, என்று பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி இன்று கோலாலும்பூரில் கட்சித் தலைமையகத்தில் கூறினார்.
இதனால், அங்கு பிகேஆரின் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரே பக்காத்தான் ரக்யாட் பிரதிநிதி ஆவார் என்றாரவர்.
அத்தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான முகம்மட் நசிர் ஹஷிம் ஏற்கனவே பிகேஆரின் சின்னத்தில் அங்கு போட்டியிட உடன்பாடு காணப்பட்டிருந்தது. ஆனால், வேட்பாளர் நியமன நாளில் தாமும் ஒரு வேட்பாளரைக் களமிறக்கப்போவதாக பாஸ் அறிவித்தது.