பிஎஸ்எம்: பாஸ் நாசிர் தொகுதியில் இன்னும் பிரச்சாரம் செய்கின்றது

PSMசிலாங்கூர் கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதியை பாஸ் கட்சி பிகேஆர்-Parti Sosialis Malaysia-வுக்கு  (பிஎஸ்எம்) விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் அது இன்னும் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக்   கொள்ளவில்லை.

அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அதன் நடப்பு உறுப்பினரான பிஎஸ்எம் பிரதிநிதி முகமட் நாசிர்
ஹஷிமுக்கு உதவி செய்ய பாஸ் ஒப்புக் கொண்டுள்ள வேளையில் அதன் பிரச்சாரம் வாக்காளர்களைக்
குழப்பும் என பிஎஸ்எம் கூறியது.

“கோத்தா டமன்சாரா மீது பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி விடுத்துள்ள அறிக்கை வரவேற்கப்பட  வேண்டிய விஷயமாகும்.”

என்றாலும் அங்கு பாஸ் வேட்பாளர் இன்னும் பிரச்சாரம் செய்வதை நாங்கள் காண்கிறோம். அவர் மீட்டுக்
கொள்ளவில்லை. அது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்,” என பிஎஸ்எம் தலைமைச் செயலாளர்  எஸ் அருட்செல்வன் விடுத்த அறிக்கை தெரிவித்தது.

அவர் பிஎஸ்எம் கட்சியின் சொந்த சின்னத்தில் போட்டியிடும் செமினியில் இன்று காலை நிருபர்களைச்
சந்தித்தார். அங்கு நிறுத்தப்பட்டுள்ள பிகேஆர் வேட்பாளர் விலகிக் கொண்டு பொதுவான பக்காத்தான்
வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

TAGS: