நஜிப் செல்வாக்கு சரிகிறது, BR1M வேலை செய்யவில்லை

najibஞாயிற்றுக்கிழமை நாட்டில் 13வது பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்த வேளையில் பிஎன் தலைவர்  நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு முந்திய கருத்துக் கணிப்பை விட மூன்று விழுக்காடு சரிந்துள்ளது.

ஏப்ரல் 28க்கும் மே 2க்கும் இடையில் தீவகற்ப மலேசியாவில் வாக்காளர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு அந்த நிலையை உணர்த்தியுள்ளதாக மெர்தேக்கா மய்யம் கூறியது.

அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு விரும்பப்படும் கட்சியாக பிஎன் -னைக் காட்டிலும் பக்காத்தான்  மதிப்பிடப்பட்டுள்ளது.

centreமார்ச் மாதம் நடைபெற்ற கருத்துக்கணிப்பின் போது 64 விழுக்காடாக இருந்த நஜிப்பின் செல்வாக்கு இப்போது வாக்களிப்பு நிகழ்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் வேளையில் 61 விழுக்காடாக சரிந்துள்ளது.

BR1M எனப்படும் ஒரே மலேசியா உதவித் தொகை முன்பு விநியோகம் செய்யப்பட்ட போதும் மற்ற ரொக்க  வெகுமதிகள் வழங்கப்பட்ட போதும் நிலவிய ‘நல்ல உணர்வும்’ சரிந்துள்ளதையும் அந்த புள்ளி விவரம் காட்டுகின்றது.

விவாதிக்க வேண்டும் என வாக்காளர்கள் விரும்பும் விஷயங்கள் பட்டியலில் பொருளாதாரம் பற்றிய கவலை முதலிடத்தை பிடித்திருந்தது. பேட்டி காணப்பட்டவர்களில் 25 விழுக்காட்டினர் பொருளாதாரத்திற்கு முதலிடம்  வழங்கினர்.

நெருக்கமாக உள்ள தொகுதிகள் (Marginal seats) வெற்றியாளரை முடிவு செய்யும்

centre2மெர்தேக்கா மய்யம் நடத்திய ஆய்வு முடிவுகள் அடிப்படையில் பார்த்தால் நாடு முழுவதும் நெருக்கமாக உள்ள  46 நாடாளுமன்றத் தொகுதிகளின் முடிவுகளே- மூன்று விழுக்காடு திசை மாறக் கூடிய நிலையில் உள்ள  தொகுதிகள்- தேர்தல் வெற்றியாளரை நிர்ணயம் செய்யும்.

அந்த 46 தொகுதிகளில் 34 தீவகற்ப மலேசியாவிலும் சபாவில் ஆறும் சரவாக்கில் ஆறும் உள்ளன.

அந்த நெருக்கமான தொகுதிகளைத் தவிர பிஎன் 81 நாடாளுமன்ற இடங்களையும் பக்காத்தான் 89 இடங்களையும் வெல்லும் என அந்த மய்யம் மதிப்பிட்டுள்ளது.

மொத்தம் 1,600 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடம் தொலைபேசி வழி அந்த கருத்துக்கணிப்பு
மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 59 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் சீனர்கள் 32 விழுக்காட்டினர்,
இந்தியர்கள் 9 விழுக்காட்டினர் ஆவர்.