வங்கதேச இஸ்லாமியக் கட்சித் தலைவருக்கு மரண தண்டனை

kamaruzzamanவங்கதேசத்தின் பெரிய இஸ்லாமிய எதிர்க்கட்சியான ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் போர்க் குற்றம் செய்ததாகக் கூறி அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

அந்தக் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளரான முஹமட் கமரூஷாமன் அவர்களை, இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவை உட்பட 5 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக அந்த நீதிமன்றம் கண்டிருக்கிறது.

1971இல் வங்கதேச விடுதலைப் போரின் போது 7 குற்றங்களைச் செய்ததாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

தலைநகர் டாக்காவில் உள்ள நீதிமன்றத்தால் குற்றங்காணப்பட்ட 4 வது அரசியல்வாதி கமரூஷாமன் ஆவர்.

இந்த தீர்ப்புக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் இந்த வருடத்தில் நடந்த போராடங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.