‘நஜிப் உண்மையானவர் என்றால் அம்னோவை எல்லா இனங்களுக்கும் திறந்து விட வேண்டும்’

utusan1பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் தாம் சொல்வதில் உண்மையாக இருந்தால்  அம்னோவையும் மற்ற பிஎன் கட்சிகளையும் எல்லா இனங்களுக்குக் திறந்து விட வேண்டும் என டிஏபி  நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் சவால் விடுத்துள்ளார்.

இன, சமய, மாநில, அரசியல் சார்பு வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமராகச் சேவை  செய்யப்  போவதாக நேற்று வழங்கிய வாக்குறுதி பற்றி லிம் கருத்துரைத்தார்.

utusanபிஎன் அண்மைய தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பெற்றதற்கு ‘சீனர் சுனாமி’ எனக் காரணம்  கூறியதுடன் அம்னோவுக்குச் சொந்தமான இனவாதத் தன்மையைக் கொண்ட உத்துசான் மலேசியா தலைப்புச்  செய்திகளையும் தற்காத்தும் பேசியிருந்த போதிலும் நஜிப் அவ்வாறு சொல்லியிருப்பதாக லிம் குறிப்பிட்டார்.

நஜிப் தமது வாக்குறுதியை நிறைவேற்ற ‘எதிர்கால அரசியலை’ பின்பற்ற வேண்டும் என்றும் கூறிய அவர், இன  அடிப்படை அரசியலுக்கு முடிவு கட்டுவது உட்பட பல அம்சங்கள் அதில் அடங்கியுள்ளதாகச் சொன்னார்.

“அதனைச் செய்வதற்கு நஜிப், அம்னோ இன அடிப்படையைக் கொண்ட கட்சியாக இல்லாமல் இருக்கும்  பொருட்டு அதன் கதவுகளை எல்லா மலேசியர்களுக்கும் துணிச்சலாகத் திறந்து விட வேண்டும் . மற்ற பிஎன் கட்சிகளுக்கும் அது பொருந்தும்,” என்றார் லிம்.

எல்லா இனங்களையும் அரவணைக்கும் அம்னோ என்பது புதிய சிந்தனை அல்ல என்றும் அவர் சொன்னார்.utusan2

அம்னோவைத் தோற்றுவித்த தலைவரான ஒன் ஜாபார் அந்த யோசனையை முன்மொழிந்தார். அம்னோ-  United Malays National Organisation என்பதை ‘United Malayans National Organisation’ என மாற்றுவதற்கு  ஆலோசனை தெரிவித்தார். ஆனால் அவரது யோசனை துரதிர்ஷ்டவசமாக அவரது ‘காலத்துக்கு முந்தியதாகி  விட்டது.’

“நாடு சுதந்திரம் அடைந்து 56 ஆண்டுகள் முடிந்து விட்டன. இன அடிப்படை அரசியலைப் பின்பற்றாமல்  மலேசியக் கட்சியாக அம்னோ இயங்குவதற்கான நேரம் வந்து விட்டது என நான் எண்ணுகிறேன்.”

“அது அவரது ஒரே மலேசியாக் கொள்கைக்கு அர்த்தம் கொடுக்கும். இல்லை என்றால் அவரது ஒரே  மலேசியாக் கொள்கை முற்றிலும் அர்த்தமற்றதாகி விடும்,” என்றார் லிம்.