முனைவர்: இன ஒற்றுமைக்காக தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றுங்கள்

schoolsமலாய் மொழியைப் போதனா மொழியாகப் பயன்படுத்தும் ஒரே பள்ளிக்கூட முறையை ஏற்படுத்தும் பொருட்டு  சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றுமாறு Universiti Teknologi Mara இணை வேந்தர் அப்துல்  ரஹ்மான் அர்ஷாட் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன ஒற்றுமைக்காக அது செய்யப்பட வேண்டும் என அவர் சொன்னார். அந்த இலக்கை அடைவதற்கு
அத்தகைய தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் இயங்குவது தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“13வது பொதுத் தேர்தல் இரண்டு அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நாட்டில் ஒற்றுமை இல்லை என்பது முதலாவதாகும். சுதந்திரம் அடைந்து 57 ஆண்டுகளில் ஒற்றுமைக்காக முயற்சிகள் செய்யப்பட்ட போதிலும் இனவாதம் தீவிரமடைந்துள்ளது இரண்டாவது அம்சமாகும்.”schools1

“நாம் ஒற்றுமை ஏற்படும் என நம்புகிறோம். ஆனால் அதற்கு காலம் பிடிக்க பிடிக்க நாம் அதனை அடைவதும்  விலகிக் கொண்டே போகிறது. இனவாதமும் தீவிரமடைகின்றது,” என “13வது பொதுத் தேர்தல் முடிவுகள்:  முஸ்லிம் தலைமைத்துவமும் உயிர்வாழ்வும்” என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் கூறினார்.

இந்தோனிசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து ஆகியவை தங்கள் மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும்  பொருட்டு கல்வி முறையில் ஒரு மொழிக் கொள்கையை ஏற்கனவே அமலாக்கி விட்டதாக அவர் சொன்னார்.

இப்போது பெரும்பாலான மலேசியச் சீனர்களும் மலேசிய இந்தியர்களும் தங்கள் பிள்ளைகளை தாய்மொழிப் பள்ளிகளுக்கு மட்டுமே அனுப்புகின்றனர் என்றும் குறைந்த எண்ணிக்கையினர் மட்டுமே தேசியப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். அதனால் சமூகங்கள் தனித்து நிற்கின்றன என்றார் அவர்.

“ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு மலாய் மொழியை பயன்படுத்தும் ஒரே கல்வி முறையைப் பெறுவதே சிறந்த   வழியாகும்,” என்றார் அவர்.

‘மற்ற மொழிகளுக்கு ஒகே, ஆனால் பள்ளிக்கூடங்களுக்கு ஒகே இல்லை’

அது சீன, தமிழ் மொழிகளைக் கற்கக் கூடாது என அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும் அப்துல் ரஹ்மான் சொன்னார்.

“மலாய் மொழியுடன் நமது இரண்டு மொழி ஆற்றலை வலுப்படுத்த ஆங்கில மொழியும் வலியுறுத்தப்பட வேண்டும்.”

schools2“சீனா வெகுவேகமாக வளர்ந்து வருகின்றது என்பதை நாம் அங்கீகரித்து, அவ்விரு மொழிகளுடன் மலேசிய  சீனர்கள்  மட்டுமின்றி அனைவரும்  மண்டரின் மொழியையும் கற்க வேண்டும்,” என்றார் அவர்.

அந்தக் கருத்தரங்கில் முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமட் நூர் அப்துல்லா, முன்னாள் பாஸ்  துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா, Himpunan Keilmuan Muslim (Hakim) அறிஞர் வான் அகமட் பாய்சால்  வான் அகமட் கமால் ஆகியோரும் பேசினார்கள். பிடிஎன் என்ற Biro Tatanegara-வின் முன்னாள் இயக்குநர்  கமாருதின் காச்சார் அனுசரணையாளராக பணியாற்றினார்.

தாய்மொழிப் பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை ஒப்புக் கொண்ட முகமட் நூர், அவை அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அவற்றைக் கட்டாயப்படுத்த நீதிமன்ற ஆணை பெறப்பட வேண்டும் என்றார்.

“சீன, தமிழ் பள்ளிக்கூடங்களுக்கான எல்லா மாநில, கூட்டரசு செலவுகளுக்கும் கூட்டரசு அரசமைப்பில் வகை செய்யப்படவில்லை என்றும் நாம் வாதாடலாம்.” எனக் கூறிய அவர், அத்தகைய ஏற்பாடுகள் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களுக்கு மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக் குறிப்பிட்டார்.

“எல்லா மானவர்களும் ஒரே வகுப்பறையில் கல்வி கற்க அனுமதிப்போம். அவர்கள் ஒரே சிற்றுண்டிச்
சாலையில் சாப்பிடட்டும். ஒரே திடலில் விளையாடட்டும். அப்போது தான் தேசிய ஒற்றுமையும்
ஒருங்கிணைப்பும் ஏற்பட முடியும்.”

“அதற்கு ஒப்புக் கொள்ளாதவர்கள் ஒற்றுமைக்கு எதிரானவர்கள்,” என்றார் அவர்.