இனப்படுகொலை : குவாத்தமாலா முன்னாள் ஆட்சியாளருக்கு 80 வருடச் சிறை

rios_monttகுவாத்தமாலாவின் இரத்தக்களரியுடனான உள்நாட்டுப் போரின் போது அந்த நாட்டுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் எஃப்ரைன் றியோஸ் மொண்ட் அவர்களுக்கு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 80 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1980களின் முற்பகுதிகளில், தனது ஆட்சிக்காலத்தின் போது, லிக்ஸ்ஸின் மாயா இனக்குழுவைச் சேர்ந்த 1800 பேரை கொல்வதற்கு உத்தரவிட்டதாக ஜெனரல் றியோஸ் மொண்ட் அவர்களை அங்குள்ள நீதிமன்றம் ஒன்று குற்றங்கண்டிருக்கிறது.

அவரது தலைமையின் கீழ் இருந்த இராணுவம், பழங்குடியின மக்கள் இடதுசாரி கெரில்லாக்களுக்கு உதவியதான சந்தேகத்தின் அவர்களுக்கு தண்டனையாக பரவலான வன்முறைகள், பாலியல் வல்லுறவுகள், பட்டினி போடுதல் ஆகியவற்றை மேற்கொண்டதாக நீதிபதி கூறியுள்ளார்.

தனது சொந்த நாட்டிலேயே இனப்படுகொலையைச் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட முதலாவடு முன்னாள் தலைவர் இவராவார்.