தீவிரவாதிகளின் எழுச்சியால் நைஜீரியாவில் அவசரநிலைப் பிரகடனம்

Nigeriaஆப்பிரிகாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில் முஸ்லிம் ஆட்சியை வலியுறுத்தி நாட்டின் வடக்குபகுதியில் இருந்து தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் ஸ்திரத்தனமையை பலஹீனப்படுத்தும் நோக்கில் கிளர்ச்சியாளர்களும், தீவிரவாதிகளும் ஒன்றிணைந்து வடகிழக்கு பகுதியில் உள்ள பல நகரங்களையும், கிராமங்களையும் திடீரென கைப்பற்றியுள்ளனர்.

இதனால், அதிபர் குட்லக் ஜொனாதன் நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்துள்ளார். மேலும் அதிகமான துருப்புகளை அங்கு அனுப்பவும் உறுதியளித்துள்ளார். தீவிரவாதிகள் தங்கியிருப்பதற்கான தடயங்கள் தெரியும் இடங்களை நிர்மூலமாக்கவும் உத்தரவிட்டார்.

இச்செய்தியானது அந்நாட்டின் வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.