‘உருமாற்றம் என்றால் ஏன் ஜிஹாட் என்ற சொல்லைப் பயன்படுத்தினீர்கள்?’

noorஉங்கள் கருத்து : ‘எச்சிலைத் துப்பிய பின்னர் அதனை மீட்க முடியுமா ? இது போன்ற அபத்தங்களை நாங்கள் பல  முறை அடிக்கடி செவிமடுத்துள்ளோம்’

“நான் உருமாற்றத்தை விரும்புகிறேன். போரை அல்ல” என முன்னாள் நீதிபதி விளக்கம்

அபாசிர்: முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமட் நூர் அப்துல்லா அவர்களே, முதலில் நீங்கள்  தூண்டி விட்டீர்கள். இப்போது பொய் சொல்லுகின்றீர்கள். மற்றவர்களை செய்யுமாறு கேட்டுக் கொள்ளும்  முன்னர் நீங்கள் உங்களை ‘ஜிஹாட்’ செய்து கொள்ளுங்கள்.

ஷா அலாமிலும் பாசிர் மாஸிலும் படு தோல்வி அடைந்த ‘இனப் பாதுகாவலர்கள்’ எனத் தங்களை
அழைத்துக் கொண்டு தரக்குறைவான அரசியல்வாதிகளைப் போன்று நீங்களும் இனவாத சர்ச்சையைத் தூண்டும் சந்தர்ப்பவாதி என்ற பெயர் உங்களுக்கு இப்போது கிடைத்துள்ளது.

அடையாளம் இல்லாதவன் #42402094: நீங்கள் சொன்னதில் உறுதியாக நிற்கவில்லை என்றால் வாயைத் திறக்க வேண்டாம். ஹீரோவாக முயல வேண்டாம். நீங்கள் சொன்னது அனைவருக்கும் புரிந்துள்ளது.

உங்கள் அரசியல் எஜமானர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக நுட்பமான இன உணர்வுகளை நீங்கள்
கொஞ்சம் கூட மதிக்கவில்லை. அத்தகைய மனிதர்களுக்கு தார்மீக அல்லது நெறிமுறைப் பண்புகள்
கிடையாது. அவர்கள் பொது அரங்கிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

விளையாட வேண்டாம்: முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்ற முறையில் ‘ஜிஹாட்’ என்ற
வார்த்தையைப் பயன்படுத்திய போது அது ஒரே அர்த்தத்தில்-அதாவது புனிதப் போர்- தான் எடுத்துக்
கொள்ளப்படும் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

‘உருமாற்றம்’ என்பது நீங்கள் சொல்வதின் அர்த்தம் என்றால் ‘ஜிஹாட்’- டுக்குப் பதில் அதனை
பயன்படுத்தியிருக்கலாமே ? பின்னர் ஏன் அதனை விளக்க வேண்டும் ? அவருடைய இனவாதப்
பேச்சுக்களுடைய உண்மையான அர்த்தம் எங்களுக்குத் தெரியும். எங்களை முட்டாளாக்க முயல
வேண்டாம்.

What!!!???: எச்சிலைத் துப்பிய பின்னர் அதனை மீட்க முடியுமா ? இது போன்ற அபத்தங்களை
நாங்கள் பல முறை அடிக்கடி செவிமடுத்துள்ளோம்.

கறுப்பு அர்ச்சோன்: அவர் பின்வாங்குவது நமக்கு தெரிந்த இன்னொருவரை நினைவுபடுத்தவில்லையா ? அவர் தான் புதிய தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன்.

வெறுப்புணர்வை துண்டி விட்ட பின்னர் சில அம்னோ பெரும்புள்ளிகள் தங்களது உரை ‘தவறாக
கையாளப்பட்டு விட்டது’ எனப் பின்னர் சொல்வர். முகமட் நூர் சொன்னதை யாரும் மறக்கப்
போவதில்லை. அவர் இனிமேல் இனவாதியாகத் தான் கருதப்படுவார்.

தே தாரேக்: நீங்கள் நீதிபதியாக இருந்துள்ளீர்கள். வழக்குரைஞருமான நீங்கள் உங்கள் சொற்களை
விவேகமாகவும் கவனமாகவும் பயன்படுத்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லை. உங்கள் வார்த்தைகளில் விவேகம் இல்லை.

ஜெரார்ட் லூர்துசாமி: ‘மலாய் மேலாண்மை’, ஊழல், அதிகார அத்துமீறல் ஆகியவற்றைத்
தொடருவதற்கு எல்லா மக்களும் அம்னோ/பிஎன் -னுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பதே
முகமட் நூர் சொல்லும் உருமாற்ற யோசனையாகும்.

அரசாங்கத்தில் 90 விழுக்காட்டுக்கு மேல் மலாய் ஆதிக்கம் இருக்கும் போது மக்கள் தொகையில் 26
விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்கும் சீனர்கள் எப்படி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் ?

மலாய் ஆட்சியாளர்களுடைய நிலை, இஸ்லாம், பாஹாசா மலேசியா ஆகியவற்றின் நிலை,
மலாய்க்காரர்கள், சபா, சரவாக்கில் உள்ள சுதேசிகள் ஆகியோருடைய சிறப்பு நிலை ஆகியவற்றை
டிஏபியும் கையெழுத்திட்டுள்ள பக்காத்தான் கொள்கை வடிவமைப்பு தெளிவாக நிலை நிறுத்தியுள்ளது.

பக்காத்தான் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட டிஏபி மலாய் அரசியல் அதிகாரத்தை எடுத்துக்
கொள்வதற்கு மலாய்/முஸ்லிம் ஆதிக்கம் பெற்ற பிகேஆர் கட்சியும் பாஸ் கட்சியும் அனுமதிக்கும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ?

புதிய பொருளாதாரக் கொள்கை இலக்குக்களை மலாய்க்காரர்கள் அடையத் தவறினால் கடந்த 56
ஆண்டுகளாக அம்னோ தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் போது டிஏபி மீது ஏன் பழி போட வேண்டும்? அம்னோ மற்றும் அதன் சேவகர்களுடைய பேராசையே புதிய பொருளாதாரக் கொள்கை தோல்வி
கண்டதற்குக் காரணம். சீனர்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை.

TAGS: