பிகேஆர்: உத்தேச பொருள் சேவை வரி (GST) விகிதம் தான் என்ன ?

gstஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி விகிதத்தை துல்லிதமாகத் தெரிவிக்குமாறு பிரதமர் துறை  அமைச்சர் இட்ரிஸ் ஜாலாவை பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த விகிதம் பற்றிக் குழப்பம்  ஏற்பட்டுள்ளதால் அதனை தெளிவாக்குவது அவசியம் என பிகேஆர் கிளானா ஜெயா எம்பி வோங்  சென் கூறினார்.

கடந்த ஆண்டு ஜிஎஸ்டி குறித்த விவாதத்தின் போது அதன் விகிதம் 4 விழுக்காடாக இருக்கும் என  அரசாங்கம் தெரிவித்திருந்ததாக அவர் சொன்னார்.

gst1ஆனால் சிங்கப்பூர் மாதிரியைப் பின்பற்றி அதனை ஏழு விழுக்காடாக அரசாங்கம் விதிக்கலாம் என
கடந்த வெள்ளிக் கிழமை இட்ரிஸ் ஆய்வரங்கு ஒன்றில் கோடி காட்டினார்.

“அவர்கள் உண்மையில் சிங்கப்பூர் மாதிரியைப் பின்பற்ற விரும்பினால் அவர்கள் மூன்று  விழுக்காட்டுடன் தொடங்க வேண்டும். ஏனெனில் சிங்கப்பூர் மூன்று விழுக்காட்டுடன் ஜிஎஸ்டி-யைத்  தொடங்கியது,” என வோங் சென் இன்று நிருபர்களிடம் கூறினார்.

ஊழலையும் மித மிஞ்சிய செலவுகளையும் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை  என்றும் அவர் குறை கூறினார்.

பல அடிப்படை விஷயங்களைத் தீர்க்காமல் ஜிஸ்டி பற்றி பிஎன் பேசுவது ‘நியாயமல்ல’ என்றும் அவர்
கருதுகிறார்.

 

 

TAGS: