போலீஸ் காவலில் இருந்த என். தர்மேந்திரனின் இறப்பு மீதான புலன் விசாரணை தொடர்பில் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
விசாரணையில் போலீசார் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள், எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) துணை இயக்குனர் ஹாடி ஹோ அப்துல்லா கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.
“பல போலீஸ் அதிகாரிகள் அழைக்கப்படடு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“புலன் விசாரணை விரைவாக செய்து முடிக்கப்பட்டு தர்மேந்திரனின் இறப்புக்குப் பொறுப்பானவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றாரவர்.
பிணப் பரிசோதனையில் தர்மேந்திரன் இறப்பில் குற்றவியல் அம்சங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து புலன் விசாரணை மேற்கொள்ளும் பொறுப்பை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் எடுத்துக்கொண்டது.
அது வெளியிட்டுள்ள அறிக்கை, “அதற்காக ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அது வெளிப்படையான விசாரணையை நடத்தும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பாதுகாக்க முயலாது”, என்று கூறியது.
நேற்று தர்மேந்திரன் மனைவியிடமும் அவரின் வழக்குரைஞர் என். சுரேந்திரனிடமும்(இடம்) போலீஸ் விசாரணை செய்தது.
இதுவரை, தனிப்பட்ட எண்மரிடம் விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பெரித்தா ஹரியான் கூறியது.
தர்மேந்திரன் மே 11-இல் ஒரு சண்டை பற்றிப் புகார் செய்யப் போனபோது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் கைது செய்யப்பட்ட விவரம் மே 19-இல்தான் அவரின் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டது.
மே 21-இல் அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்று குடும்பத்தார் எதிர்பார்த்திருந்த வேளையில் அவர் இறந்த செய்திதான் வந்தது.
எதிர் பாபோம் காவல் துறைஇடமிறந்து என்ன பதில் வருகிறது என்று.
லாக்கப்பில் திடீர் மரணம்?? நல்ல நிலையில் கைது செய்யபட்டவர் மறுநாள் மரணம்! காரணம் கேட்டால், உடல்நல குறைவு, ஆஸ்துமா, மாரடைப்பு, இன்னும் பல பதில்கள் ?? ஆண்டாண்டு காலமாக இந்த சீரியல் தொடர்கதையை கேட்டு கேட்டு இதயம் ரணமாகிவிட்டது. இதை தடுப்பதற்கு என்ன வழி?? ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டால் அவரை நேரடியாக அருகாமையில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டுசென்று உடல் நலம் பரிசோதித்து மருத்துவரில் சான்றிதழுடன் காவல் நிலையம் கொண்டுசெல்ல வேண்டும். இல்லையேன், லாக்கப்பில் போடும் முன் நீதித்துறை அதிகாரி அல்லது மனித நேய “NGO ” கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். அவர்கள் கைதியை பார்பதற்கும் பேசுவதற்கும் போலீஸ் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அதைவிடுத்து , நோயாளியை லாக்கப்பில் அடைத்து கொள்கிறீர்களா, அடித்து கொள்கிறீர்களா யாருக்கு வெளிச்சம், தெரியும் ??
தடுப்பதற்கு என்ன வழி?.நம் இளயோர்கள் நம் சமுதாய ,மக்களை சககடிக்க கூடாது . ஒரு தமிழன் ஒரு தமிலனைதன் .கொல்ரன் .இதையும் தடுப்பதற்கு என்ன வழி?.
தர்மேந்திரன் மனைவியிடமும், சுரேந்திரனிடமும் விசராணை செய்வதை விடுத்து போலிஸ்காரர்களிடம் விசாரணையைத் தொடங்குங்கள். “வெளிப்படையான விசாரணை” என்றால்? பொதுமக்களும் கலந்து கொண்டு பார்க்கலாமோ? விசாரணை முடிவில் ஏதாவது ஒரு போலீஸ்காரத் தமிழனைக் குற்றவாளியாகக் காண்பிக்காதீர்கள்!