தர்மேந்திரனின் தகப்பனாருக்கு “இரகசிய” அழைப்பு

Paul low keng Swan1போலீஸ் தடுப்புக் காவலில் இறந்து போன என். தர்மேந்திரனின் குடும்பத்தினருக்கு தமது அதிகாரி ஒருவர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டது வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்ப்பதற்காக அல்ல, உதவு வழங்குவதற்காகத்தான் என்று பிரதமர் துறை அமைச்சர் விளக்கம் அளித்தார்.

“அடிப்படை மனித உரிமை அனைவரின் உரிமையாகும். இதன் அடிப்படையில்தான் எனது அலுவலக அதிகாரி குடும்பத்தாருடன் தொடர் கொள்ள நேற்று முயற்சி மேற்கொண்டார். எந்தத் தரப்பினருடனும், அவர்களின் அரசியல் இணைப்பு எதுவாக இருந்தாலும் சரி, இணைந்து செயல்பட நாங்கள் விரும்புகிறோம் என்பதை விளக்க முயற்சித்தோம்.

“இது வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்த்துக் கொள்வதற்கான வழி எனத் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது எங்களுடைய நோக்கமே இல்லை. அனைவருக்கும் உகந்த நீதி கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் எந்தத் தரப்பினருடனும், அவர்களின் அரசியல் இணைப்பு எதுவாக இருந்தாலும் சரி, இணைந்து செயல்பட தயாராக் இருக்கிறோம் மீண்டும் உறுதிபடுத்துகிறேன்”, என்று அப்புதிய அமைச்சர் பால் லோ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

தம்மை பிரதமர் துறை அதிகாரி ஒருவர் நேற்று தொடர்பு கொண்டதாக இன்று முன்னதாக தமேந்திரனின் தகப்பனார் கூறியிருந்தற்கு மனித உரிமை மற்றும் நேர்மை ஆகியவற்றுக்கு பொறுப்பான இந்த அமைச்சர் பதிலாக இதனைக் கூறினார்.

இன்று பின்னேரத்தில், பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பி. நாராயணசாமி, 59, தம்மிடம் ரவீந்தரன் என்பவர் பேசியதாகவும், இந்த உரையாடலை இரகசியாமாக வைத்திருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

இதே ஆள் பின்னர் தர்மேந்திரனின் மனைவி எஸ். மேரியை பின்னர் தொடர்பு கொண்டதாகவும் நாராயணசாமி மேலும் கூறினார்.

“தாம் பிரதமர் துறை அலுவலகத்திலிருந்து அழைப்பதாகவும், தர்மேந்திரனின் இறப்பு குறித்து பேசுவதற்கு என்னையும்Dharmendaran மேரியையும் சந்திக்க விரும்புவதாகக் கூறிய அவர், இது குறித்தும், நமது இரகசியச் சந்திப்பு குறித்தும் எங்களுடைய வழக்குரைஞரிடம் எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்”, என்று நாராயணசாமி தமிழில் விளக்கம் அளித்தார்.

அவர் எங்களுடையக் குடும்பத்திற்கு வழக்குரைஞரை அமர்த்த விருப்பதால்  எங்களுடைய தற்போதைய வழக்குரைஞரை வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறிய நாராயணசாமி, இதனை “மூடிமறைப்பதற்கான ஒரு முயற்சி” என்றார்.

தமது மகனின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிவதில் விசாரணையின் கவனம் நிலைநிறுத்தப்பட வேண்டுமேயன்றி தமது குடும்பத்தைப் பற்றி அல்ல என்பதால் அந்த அதிகாரி அளிக்க முன்வந்ததை நிராகரித்து விட்டதாக நாராயணசாமி கூறினார்.

“உடற்கூறு நிபுணர் அவர் இறந்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார். அதனால் விசாரணையை ஏன் தொடரக் கூடாது”, என்று அவர் வினவினார்.

நஜிப் விளக்கம் அளிக்க வேண்டும்

தர்மேந்திரனின் “கொலைக்கு பொறுப்பான போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட வேண்டிய” வேளையில், அதற்கு மாறாக, அவரது துறைக்குட்பட்ட அதிகாரிகள் ஏன் தர்மேந்திரனின் இறப்பில் தலையிடுகின்றனர் என்பதற்கு பிரதமர் நஜிப் ரசாக் விளக்க  வேண்டும் என்றாரவர்.

Dharmendaran1நாராயணசாமியின் அறிக்கையை அவரது குடும்ப வழக்குரைஞர் ஜி.சிவமலர் மொழி பெயர்ப்பு செய்தார். பிகேஆர் துணைத் தலைவர் என். சுரேந்திரனும் அச்செய்தியாளர் கூட்டத்தில் இருந்தார்.

புதிய பிரதமர் துறை அமைச்சர் பால் லோ பின்னர் விடுத்த அறிக்கையில் அவருடைய அதிகாரிகள் பிகேஆர் சுபாங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவை நேற்று தொடர்பு கொண்டு அரசியல் பிளவுக்கு பாலமிட விரும்புவதாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.

விசாரணையத் துரிதப்படுத்துமாறு போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“நான் இது குறித்து உள்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். விசாரணை முழுமையாக நடத்தப்படும் என்றும், பொறுப்பானவர் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்”, என்று பால் லோ தெரிவித்தார்.