ஸாஹிட் பதவி துறக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை

safwanஉள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி பதவி துறக்க வேண்டும் எனக் கோரி உள்துறை அமைச்சுக்கு வெளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் நோக்கத்துடன் அண்மைய காலமாக அரசியல்வாதிகளும் சமூகப் போராளிகளும் கைது
செய்யப்பட்டதாக கூறிக் கொண்டு  அதற்காக  ஸாஹிட் பதவி விலக வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

புத்ராஜெயாவில் சுட்டெரிக்கும் வெயிலில் அமைச்சின் முக்கிய நுழைவாயிலுக்கு வெளியில் கூடிய
அவர்கள் புதிய உள்துறை அமைச்சருக்கு எதிராக தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

“அடாம் அட்லி (அப்துல் ஹலிம்) தொடக்கம் மேற்கொள்ளப்படும் கைதுகள் மீது எங்கள் நிலையை
நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.”

“புதிய உள்துறை அமைச்சர் பதவி ஏற்ற போதிலும் அந்த அமைச்சு தொடர்ந்து கட்சி சார்புடன்
இயங்குகிறது. இந்த நிலை தொடருமானால் போலீசார் சுயேச்சையாக செயல்பட முடியாது,” என Pro-
Mahasiswa பேராளர் அப்துல் முஹிட் முகமட் கூறினார்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கியமான நபராக இருந்தவர் Solidariti Mahasiswa Malaysia அமைப்பின்
தலைவர் முகமட் சாப்வான் அனாங் ஆவார்.

கடந்த புதன் கிழமை தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், இன்று காலை
ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.safwan1

“அந்தக் கைதுகள் அரசியல் நோக்கத்தைக் கொண்டவை. தெரிவு செய்யப்பட்டவர்கள் மீது மட்டும்  வழக்கு போடப்படுகின்றது. அது உள்துறை அமைச்சு, போலீஸ் படை ஆகியவற்றின் தொழில்  நிபுணத்துவத்துக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றது.”

“ஸாஹிட் அந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாவிட்டால் பதவி விலக வேண்டும். தேர்வு செய்து வழக்கு  போட போலீசாரை அனுமதித்ததின் வழி அவர் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்,”  என்றார் சாப்வான்.

பின்னர் சாப்வான், அப்துல் முஹிட், Persatuan Mahasiswa Islam UM தலைவர் முகமட் புஹைரி
முகமட் சோபியான், Gabungan Mahasiswa Islam Se-Malaysia தலைவர் முகமட் அஸ்ஹார் சபார்
ஆகியோர் அமைச்சுக்குள் சென்று தங்கள் மகஜரைக் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர்.