புகைத்தலுக்கு எதிரான சட்டம் ஒன்று ரஷ்யாவில் அமலுக்கு வருகிறது. சில பொது இடங்களில் புகைப்பதை இது தடை செய்வதுடன், புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களுக்கும் அது கட்டுப்பாடு விதிக்கிறது.
வேலைத்தளங்கள், வீட்டுத்தொகுதிகளின் படிக்கட்டுப் பகுதிகள், ரயில்கள், பஸ்கள் மற்றும் விமான நிலையங்கள், பஸ் நிலையங்களில் இருந்து 15 மீட்டர்கள் வரையிலான இடப்பகுதி ஆகியவற்றில் இனிமேல் புகைக்க முடியாது.
இன்னும் ஒரு வருடத்தில் இந்தத்தடை உணவுவிடுதிகள், மதுபானச் சாலைகள், கப்பல்கள் மற்றும் ரயில்களிலான நீண்ட தூரப் பயணங்கள் ஆகியவற்றுக்கு விஸ்தரிக்கப்படும்.
விலை அதிகரிக்கப்படுவதுடன், இப்படியான இடங்களில் உள்ள கடைகளிலும் சிகரட்டுக்கள் விற்கப்படமாட்டா.
40 வீதமான ரஷ்யர்கள் புகைபிடிக்கிறார்கள் என்பதுடன் புகைத்தல் தொடர்பான நோய்களால் வருடாந்தம் அங்கு 5 லட்சம் பேர் வரை இறக்கிறார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
-BBC