இந்திய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை

tna_delhi13ம் திருத்தச் சட்டம் குறித்து இந்திய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

13ம் திருத்தச் சட்டத்தின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.

இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

காணி, போலிஸ் அதிகாரங்கள் இன்றி வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது பயனில்லை என கூட்டமைப்பினர் வலியுறுத்த உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுயாட்சி அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாகவும், இதனை மாவை சேனாதிராஜா அண்மையில் வெளிப்படுத்தியிருந்ததாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதேவேளை, 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் லண்டனில் தமிழ் கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

TAGS: