பிஎன்னை ஆதரிப்பதாக வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கப்பட்டதாம்

1 voteகோலா சிலாங்கூரில் நாடாளுமன்றத்துக்குப்  போட்டியிட்டு தோற்றுப்போன  டாக்டர் சுல்கிப்ளி அஹமட்,  வாக்காளர்களுக்கு ரிம1,000 கொடுக்கப்பட்டு பிஎன்னுக்கு வாக்களிப்பதாக அவர்களிடம் சமயமுறைப்படி சத்தியமும் வாங்கப்பட்டது என்கிறார்.  சில இடங்களில் ஏற்கனவே வாக்களித்தவர்களிடம் பிஎன்னுக்குத்தான் வாக்களித்ததாக சத்தியம் செய்யும்படியும் கூறப்பட்டதாம்.

இது  பெரும்பாலும் ஜெராம் பகுதியில் நடந்தது.

“மலாய்க்காரர்கள் சத்தியத்துக்குப் பயப்படுபவர்கள்”, என்றவர்  மலேசியாகினியின் நேர்காணலில் கூறினார்.

பிஎன் முகவர்களிடம் பணம் வாங்கியவர்களில் 10பேர் தம்மிடம் நடந்ததைத் தெரிவித்ததாக அவர் கூறினார்.