பாஸ் தலைவரின் பேச்சால் ஜெராம் வாக்காளர்கள் ஆத்திரம்

1 bnவாக்காளர்களுக்கு ரிம 1,000 கொடுக்கப்பட்டு பிஎன்னுக்கு வாக்களிப்பதாக அவர்களைச் சத்தியம் செய்ய வைக்கப்பட்டதுதான் தமது கோலாசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதித் தோல்விக்குக் காரணம் என்று பாஸ் கட்சியின் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் கூறியிருப்பது குறித்து ஜெராம் வாக்காளர்கள் ஆத்திரமடைந்திருக்கிறார்களாம்.

ஆத்திரத்தை வெளிப்படுத்தி அவர்களிடமிருந்து “நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளும் குறுஞ் செய்திகளும்” வந்திருப்பதாகக் கூறுகிறார் கோலாசிலாங்கூரின் பிஎன் எம்பி இர்மொஹிஜாம் இப்ராகிம் (இடம்).

“அவர் தோற்றதற்காக பிஎன்னையும் அம்னோவையும் இழிவுபடுத்தக் கூடாது”, என்றாரவர்.