பக்காத்தான்மீது மலாய்க்காரர்கள் கொண்டுள்ள அச்சத்தை அம்னோ பயன்படுத்திக்கொண்டது

1 dr zulபக்காத்தான் ரக்யாட் வலுவானால் அதில் டிஏபி-இன் ஆதிக்கம் மேலோங்கும் என்று பெரும்பாலான மலாய்க்காரர்கள் கொண்டுள்ள அச்சத்தை அம்னோ அதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது என்று கூறியுள்ளார் பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட்.

அந்த அணுகுமுறையைக் கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகர்ப்புறங்களிலும் அது கடைப்பிடித்ததன் காரணமாகத்தான் மலாய்க்காரர்கள் பொதுத் தேர்தலில் பாஸுக்கு எதிராக வாக்களித்தனர்; 2008-இல் 77 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்த அம்னோவால் 2013-இல் 88 இடங்களை வெற்றி முடிந்தது.

மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார்.