அந்நியர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறைகள் மறுஆய்வு

1 foreignஅந்நிய தொழிலாளர்கள் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாவதைத் தடுக்க அவர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறைகள் அனைத்தையும் உள்துறை அமைச்சு மறுஆய்வு செய்யும்.

அவர்களுக்குக் காப்புறுதி உண்டா, பணிக்கேற்ற சம்பளம் கொடுக்கப்படுகிறா போன்றவையும் கவனிக்கப்படும் என அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கூறினார்.

மலேசியாவை மேம்படுத்த அவர்களின் உதவி தேவை என்பதால் அவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கவனிக்காது இருக்க முடியாது.

அரபு நாடுகள், சிங்கப்பூர் போன்றவை பின்பற்றும்  நடைமுறைகளையும் அமைச்சு ஆராயும்.